Breaking News
கேரள கோவில் திருவிழாவில் பட்டாசு விபத்து: 150 பேர் காயம்
அஞ்சூதம்பலம் வீரர்காவு கோவிலில் வருடாந்திர காளியாட்டத் திருவிழாவின் போது அதிகாலை 12.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அஞ்சூதம்பலம் வீரர்காவு கோவிலில் வருடாந்திர காளியாட்டத் திருவிழாவின் போது அதிகாலை 12.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
காயமடைந்தவர்கள் காசர்கோடு, கண்ணூர் மற்றும் மங்களூருவில் உள்ள பல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவிலுக்கு அருகிலுள்ள பட்டாசுச் சேமிப்புத் தொழிற்சாலை தீப்பிடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.