ஞானவேல் இயக்கம், அனிருத் இசை.... ரஜினிகாந்தின் 170-வது படத்தில் அமிதாப் பச்சன்
ரஜினிகாந்த் நடிக்க உள்ள 170 ஆவது திரைப்படத்தில் நடிகர் அமிதாப்பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், அடுத்ததாக ஜெய் பீம் படத்தின் இயக்குனர் TJ.ஞானவேல் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.
அத்துடன் படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதே சமயம் நடிகர்கள் தேர்வையும் இயக்குனர் நடத்தி வருகிறார். அதில் ரஜினியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
அந்த கதாபாத்திரத்தில் ஏற்கனவே விக்ரம், அர்ஜுன் ஆகியோரை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் தற்போது பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
30 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி - அமிதாப் ஆகியோர் ஹிந்தி படத்திற்காக இணைந்து பணியாற்றி இருந்தனர். இந்த நிலையில் தற்போது 30 ஆண்டுகள் கழித்து இருவரும் இணைகின்றனர்.
மேலும் இது அமிதாப்பச்சனுக்கு இது முதல் நேரடி தமிழ் படம். ரஜினிகாந்த் - ஞானவேல் இணையும் இந்த திரைப்படத்தின் படப் பிடிப்பு இன்னும் இரண்டு மாதங்களுக்குள் தொடங்கும் என படக் குழு தரப்பில் தெரிவிக்கின்றனர். மேலும் அந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.