ராமர் கோவில் திறப்பு: இந்திய பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து
இந்திய பிரதமர் மோடி, மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நாத் மற்றும் சிறிலங்கா மற்றும் மொரீஷியஸ் ஆகிய இரு நாடுகளின் உயர்மட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர்.
அயோத்தியில் கடந்த மாதம் நடைபெற்ற ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா மற்றும் மொரிஷியஸ் இந்தியாவின் ஒருங்கிணைந்த கொடுப்பனவு இடைமுகம் (யுபிஐ) சேவைகளை மெய்ந்நிகர் முறையில் தொடங்கி வைக்கும் போது அவரது கருத்துக்கள் வெளிவந்தன. இதில் இந்திய பிரதமர் மோடி, மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நாத் மற்றும் சிறிலங்கா மற்றும் மொரீஷியஸ் ஆகிய இரு நாடுகளின் உயர்மட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர்.
பொருளாதார மற்றும் கலாசார அரங்கில் இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான நீண்டகால வரலாற்று உறவுகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோடிட்டுக் காட்டினார். "... பிரதமர் மோடி, உங்களைப் பொறுத்தவரை, இது இரண்டாவது முக்கியமான சந்தர்ப்பம். ஏனென்றால் சில வாரங்களுக்கு முன்பு ராமர் கோயில் திறக்கப்பட்டதற்காக நான் உங்களை பாராட்ட வேண்டும். இது பொருளாதார ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் எங்களது தொடர்புகளைக் காட்டுகிறது" என்று அவர் கூறினார்.