74.1% இந்தியர்களால் ஆரோக்கியமான உணவைப் பெற முடியவில்லை
இந்திய மக்கள் தொகையில் 16.6 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டில் 74.1 சதவீத இந்தியர்களால் ஆரோக்கியமான உணவைப் பெற முடியவில்லை என ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் ஆரோக்கியமான உணவைப் பெற முடிந்தவர்களில் எண்ணிக்கை 76.2 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரோக்கியமான உணவைப் பெறும் தகுதி பாகிஸ்தானில் 82.2 சதவீத மக்களிடமும், வங்கதேசத்தில் 66.1 சதவீத மக்களிடமும் இல்லை என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.வ்இதற்கும் அதிகரிக்கும் உணவின் விலை அல்லது விலைவாசிக்கு ஏற்ற ஊதிய உயர்வு இல்லாமையே காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்திய மக்கள் தொகையில் 16.6 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் தாக்கம் உடல்நலன் தாண்டி பொருளாதார, சமூக பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றது. இருப்பினும் 2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களை ஒப்பிடுகையில் இந்தியாவில் இது சற்றே குறைந்துள்ளதாம்.
ஆசிய கண்டத்தைப் பொறுத்தவரையில் தெற்காசியாவில் உணவு பாதுகாப்பின்மை அதிகம்தான் என்றாலும் கூட கிழக்கு ஆசியாவிலேயே இது அதிகம் எனத் தெரிகிறது.