'இந்தியாவால் தாக்கப்பட்டால்...': பஹல்காம் தாக்குதலுக்கு மறுநாள் பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் கொக்கரிப்பு
பாகிஸ்தான் அரசியல் ரீதியாக பிளவுபட்டுள்ளது. ஆனால் நாங்கள் ஒரு தேசமாக ஒன்றுபட்டு நிற்கிறோம்.

பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் சவுத்ரி ஃபவாத் ஹுசைன், இந்தியாவால் தாக்கப்பட்டாலோ அல்லது அச்சுறுத்தப்பட்டாலோ நாடு தன்னை பாதுகாத்துக் கொள்ள ஒன்றாக நிற்கும் என்று கூறினார்.
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்), பாகிஸ்தான் மக்கள் கட்சி (பி), பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ), ஜாமியத் உலேமா-இ-இஸ்லாம் (ஜே.யு.ஐ) உள்ளிட்ட அனைத்து முக்கிய கட்சிகளும் அரசியல் பிளவுகளை மீறி ஒற்றுமையாக நிற்கும் என்று வெளியேற்றப்பட்ட பிரதமர் இம்ரான் கானின் கட்சியின் மூத்த தலைவரான உசைன் அறிவித்தார்.
"பாகிஸ்தான் அரசியல் ரீதியாக பிளவுபட்டுள்ளது. ஆனால் நாங்கள் ஒரு தேசமாக ஒன்றுபட்டு நிற்கிறோம். இந்தியாவால் தாக்கப்பட்டால் அல்லது அச்சுறுத்தப்பட்டால், பி.எம்.எல்-என், பி.பி.பி, பி.டி.ஐ, ஜே.யு.ஐ மற்றும் பிற அனைத்து குழுக்களும் நம் தாயகத்தை பாதுகாக்க பாகிஸ்தான் கொடியின் கீழ் அணிதிரளும்" என்று பஹல்காம் படுகொலை குறித்து எதுவும் குறிப்பிடாமல் ஹுசைன் எக்ஸ் இல் ஒரு பதிவில் கூறினார்.