Breaking News
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக நீதிபதி லஃபார் தாஹிர் நியமனம்
நேற்று (2) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதியரசரான மொஹமட் லபர் தாஹிர் அதன் பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் நேற்று (2) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தற்போதைய தலைவர் நீதியரசர் பந்துல கருணாரத்ன ஜனாதிபதியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடுமுறைக்கு முன்னரே இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய பதில் ஜனாதிபதி நியமிக்கப்படும் வரை இந்த நியமனம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.