Breaking News
தமிழர் பகுதிகளில் அமைக்கப்படும் புதிய விகாரைகள் – தொல்லியல் திணைக்களத்தின் கருத்து
வடக்கு கிழக்கில் நிலங்களை கையகப்படுத்துதல் புதிய பௌத்த ஆலயங்களை அமைத்தல் போன்ற நடவடிக்கைகளை நிறுத்துமாறு ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க விடுத்த உத்தரவு குறித்து இன்னமும் இறுதி முடிவை எடுக்கவில்லை என தொல்லியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுரமனதுங்க இதனை தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது ஆராயப்பட்டது, நாங்கள் இது குறித்து இணக்கப்பாட்டிற்கு வரவில்லை, அதேவேளை அதனை நிராகரிக்கவும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாங்கள் தொடர்ந்தும் ஆராய்ந்துவருகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.