Breaking News
மீதமுள்ள அனைத்து கடவுச்சீட்டுகளும் ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும்: அமைச்சர்
பத்தாவது பாராளுமன்றத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

விநியோகிக்க திட்டமிடப்பட்ட எஞ்சியுள்ள அனைத்து கடவுச்சீட்டுகளும் ஒரு மாத காலத்திற்குள் வழங்கப்படும் என்றும், இந்தச் செயல்முறையை படிப்படியாக இயல்பாக்குவதற்கான முயற்சிகள் ஏற்கனவே நடந்து வருவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
கடந்த 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அவரது தலைமையில் நடைபெற்ற பத்தாவது பாராளுமன்றத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.