டார்ட்மவுத்தில் நடந்த பல துப்பாக்கி குற்றச்சாட்டுகள் தொடர்பில் 3 பேர் கைது
ஹாலிஃபாக்ஸ் பிராந்திய காவல்துறையின் செய்தி வெளியீட்டின்படி, எல்லைச் சேவைகள் மார்ச் 6 அன்று பொதியை இடைமறித்ததாகவும், துப்பாக்கி பகுதி கனடாவில் கடத்தப்பட்டதை அறிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து டார்ட்மவுத்துக்கு அனுப்பப்பட்ட ஒரு பொதியில் துப்பாக்கியின் "பகுதியை" கனடா எல்லைச் சேவைகள் நிறுவனம் கண்டுபிடித்ததை அடுத்து மூன்று பேர் பல துப்பாக்கி குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.
ஹாலிஃபாக்ஸ் பிராந்திய காவல்துறையின் செய்தி வெளியீட்டின்படி, எல்லைச் சேவைகள் மார்ச் 6 அன்று பொதியை இடைமறித்ததாகவும், துப்பாக்கி பகுதி கனடாவில் கடத்தப்பட்டதை அறிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 14 அன்று, கட்டுப்படுத்தப்பட்ட விநியோகத்தின் போது பொதியை எடுக்க முயன்றபோது சந்தேகக் குற்றவாளியைப் புலனாய்வாளர்கள் கைது செய்தனர்.
சந்தேக குற்றவாளிக்குத் தொடர்புடைய வீடொன்றை புலனாய்வாளர்கள் சோதனையிட்டதுடன் ஒரு பெண்ணையும் கைது செய்தனர். அதிகாரிகள் இரண்டாவது டார்ட்மவுத் இல்லத்தில் சோதனை நடத்தி திங்களன்று 70 வயது முதியவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி, தடை செய்யப்பட்ட கத்திகள், பிரதித் துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.