Breaking News
“ஜெம் ஸ்ரீலங்கா – 2025' இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியை ஜனாதிபதி திறந்து வைத்தார்
சீன கோட்டை இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தகர்கள் சங்கம் (CGJTA) ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் இந்த கண்காட்சி நேற்று முதல் ஜனவரி 10 வரை பொதுமக்களுக்கு திறந்திருக்கும்.

"ஜெம் ஸ்ரீலங்கா – 2025" இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி நேற்று (08) முற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் சினமன் பெந்தோட்ட பீச் ஹோட்டலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சீன கோட்டை இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தகர்கள் சங்கம் (CGJTA) ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் இந்த கண்காட்சி நேற்று முதல் ஜனவரி 10 வரை பொதுமக்களுக்கு திறந்திருக்கும்.
திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதி திசாநாயக்க அவர்கள் கண்காட்சிச் சாவடிகளைப் பார்வையிட்டதுடன், இரத்தினக்கல் மற்றும் ஆபரண உற்பத்தியாளர்கள் முகங்கொடுக்கும் சவால்களுக்கு முகங்கொடுத்ததுடன், அவர்களுடன் நட்புறவுக் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.