சாஸ்கடூனின் ஆண்டின் 3வது படுகொலையில் 50 வயதான மனிதர் படுகொலை
பாதிக்கப்பட்டவரின் நெருங்கிய உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கட்டத்தில் அவரது பெயரை வெளியிட முடியாது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

சாஸ்கடூன் நகரத்தின் ஆண்டின் மூன்றாவது படுகொலைக்குப் பிறகு சந்தேக குற்றவாளியைத் தேடுவதாக சாஸ்கடூன் காவல்துறையினர் கூறுகின்றனர். இதில் 50 வயதான ஒருவர் இறந்துவிட்டார்.
சனிக்கிழமை நள்ளிரவு 12.25 மணியளவில் ரிவர்ஸ்டேல் சுற்றுப்புறத்தில் உள்ள அவென்யூ I சவுத் 200 புளோக்கில் உள்ள ஒரு வீட்டில் காயமடைந்த மனிதரின் தொடர்பிலான அறிக்கைக்கு அதிகாரிகள் அழைக்கப்பட்டனர் என்று சாஸ்கடூன் காவல்துறையினர் ஒரு செய்தி வெளியீட்டில் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் 50 வயதான ஒருவரை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் விரைவில் அவர் காயங்களால் இறந்தார்.
சந்தேக குற்றவாளியை இன்னும் தேடி வருவதாக காவல்துறையினர் சிபிசியிடம் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவரும் சந்தேக குற்றவாளியும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் அவர்கள் சந்தேக குற்றவாளியின் வயது அல்லது பாலினத்தை வெளியிடவில்லை.
பாதிக்கப்பட்டவரின் நெருங்கிய உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கட்டத்தில் அவரது பெயரை வெளியிட முடியாது என்று காவல்துறையினர் தெரிவித்தனர். பெருங்குற்றத்தடுப்புப் பிரிவு தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.