கிருஷ்ணா ஜென்மபூமி வழக்கு இடமாற்றத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்தது
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த விசாரணைக்கு முன்னர் வழக்கு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டாம் எனவும் மசூதி குழு உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மதுராவில் உள்ள கிருஷ்ணா ஜென்மபூமி-ஷாஹி இத்கா தகராறு தொடர்பான அனைத்து வழக்குகளையும் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு எதிராக மசூதி குழு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விசாரித்தது.
குளிர்கால விடுமுறைக்கு பிறகு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விசாரணையின் போது, கமிட்டி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தஸ்னீம் அகமது, தகராறு தொடர்பான வழக்குகளில் விசாரணைக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்குச் செல்ல நிதி இல்லை என்று கூறினார்.
கிருஷ்ணா ஜென்மபூமி - ஷாஹி இத்கா தகராறு தொடர்பான அனைத்து வழக்குகளையும் அலகாபாத் உயர் நீதிமன்றம், மே மாதம் தனக்கு மாற்றிக் கொண்டது.
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த விசாரணைக்கு முன்னர் வழக்கு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டாம் எனவும் மசூதி குழு உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், நீதிமன்றத்தால் அத்தகைய நிவாரணம் வழங்கப்படவில்லை.
இரு தரப்பு வாதங்களையும் கேட்காமல், உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிடுவது நியாயமாகாது என நீதிபதி கவுல் தெரிவித்துள்ளார். "உயர்நீதிமன்றத்தில் நாங்கள் அவநம்பிக்கையை காட்ட முடியாது. குளிர்கால விடுமுறைக்கு பிறகு உடனடியாக வழக்கை பட்டியலிட்டுள்ளேன்".