Breaking News
ஓமந்தை ரயில் நிலையம் அருகே ரயில் தடம் புரண்டது
நேற்று (26) பிற்பகல் 4 மணியளவில் புகையிரதத்தின் ஒரு பெட்டி தடம் புரண்டது,

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த இன்டர்சிட்டி கடுகதி ரயில் ஓமந்தை ரயில் நிலையம் அருகே தடம் புரண்டுள்ளது.
அதன்படி, நேற்று (26) பிற்பகல் 4 மணியளவில் புகையிரதத்தின் ஒரு பெட்டி தடம் புரண்டது, மேலும் புகையிரதத்தை மீண்டும் புனரமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மஹவ முதல் யாழ்ப்பாணம் வரையிலான ரயில் பாதை புனரமைக்கப்பட்டு மீண்டும் இயக்கத்திற்கு கொண்டு வரப்பட்ட பின்னர் நடந்த முதலாவது ரயில் தடம் புரண்டதாக அறிவிக்கப்பட்ட முதலாவது நிகழ்வு இதுவாகும்.