Breaking News
பிரபாஸுக்கு வில்லனாகும் கமல் ஹாசன்?

நேக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா படாணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் திரைப்படம் ‘ப்ராஜெக்ட் கே’.
மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகிவரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இத்திரைப்படத்தில் கமல் ஹாசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.