Breaking News
பதவி நீக்கப்பட்ட விவகாரம் : ஜனாதிபதியை சந்திக்கின்றார் ஜீவன் தியாகராஜா
ஆளுநர் பதவியை இராஜினாமா செய்யும் உத்தரவு தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக முன்னாள் ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்திற்கு பல காலமாக அளப்பரிய சேவையை ஆற்றியுள்ளதால் இந்த முடிவை பரிசீலனை செய்யும்படி தான் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக தான் கொழும்பு செல்லவுள்ளதாக தெரிவித்த முன்னாள் ஆளுநர் ஜனாதிபதியை சந்திக்கும் வரை அது தொடர்பில் விளக்கமளிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் பதவி விலகுவதற்கு முன்னர் வழங்கிய சேவைகளுக்காக பல்வேறு தரப்பினருக்கு செலுத்த வேண்டிய கொடுப்பனவுகள் தொடர்பான உரிய ஆவணங்கள் மற்றும் காசோலைகளில் கையொப்பமிட்டுள்ளார்.