Breaking News
இரகசிய வலயத்தை அம்பலப்படுத்திய விமல் வீரவன்ச
இலங்கை வீரர் ஒருவர் கூட அந்த பிராந்தியத்திற்குள் நுழைய முடியாது என்று கூறிய வீரவன்ச, இந்த உண்மை பலருக்கும் தெரியாது என்றும் குறிப்பிட்டார்.

கொழும்பு கெத்தாராம விளையாட்டரங்கில் இந்திய வீரர்களின் பயிற்சி நடவடிக்கைகளுக்கு மாத்திரம் தனியான வலயம் இருப்பதாக விமல் வீரவன்ச எம்.பி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கை வீரர் ஒருவர் கூட அந்த பிராந்தியத்திற்குள் நுழைய முடியாது என்று கூறிய வீரவன்ச, இந்த உண்மை பலருக்கும் தெரியாது என்றும் குறிப்பிட்டார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், கிரிக்கெட் ஒரு நாட்டை ஒன்றிணைத்தது. முறிவு ஏற்பட்டால் அது தேசத்தையே பாதிக்கிறது.
பத்தாயிரம் தலைப்புகள் விவாதிக்கும் நாட்டில் அதனால்தான் இந்த தலைப்பு எல்லாவற்றையும் விட உயர்ந்துள்ளது என்றார்.