Breaking News
உததலாவின்ன காஸி நீதிமன்ற நீதிபதி கைது
ரஜவெல்ல பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் நீதிபதி கைது செய்யப்பட்டுள்ளார்.
குவாஸி நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் விவாகரத்துச் சான்றிதழை வழங்குவதற்காக 4,500 ரூபா இலஞ்சம் கோரி வாங்கிய குற்றச்சாட்டில் உததலாவின்ன காஸி நீதிமன்ற நீதிபதி கைது செய்யப்பட்டார்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரஜவெல்ல பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் நீதிபதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக குற்றவாளி தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் முன் நிறுத்தப்படுத்தப்படவுள்ளார்.