Breaking News
ஹாமில்டனில் உள்ள நெடுஞ்சாலை 403 மூடல்
பிற்பகலுக்கு முன்னதாக பாதைகள் மூடப்பட்டதாக ஒன்ராறியோ மாகாணக் காவல்துறை சார்ஜென்ட் கெர்ரி ஷ்மிட் கூறினார்.

ஹாமில்டனைச் சுற்றியுள்ள நெடுஞ்சாலை 403 செவ்வாய்க்கிழமை மாலை வரை நெடுஞ்சாலை 6 வடக்கு மற்றும் பிரதான வீதிக்கு இடையில் இரு வழிகளிலும் தொடர்ந்து மூடப்பட்டதாக ஒன்ராறியோ மாகாணக் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஹாமில்டன் காவல்துறையினர் இப்பகுதியில் விசாரணை நடத்தி வருவதால், பிற்பகலுக்கு முன்னதாக பாதைகள் மூடப்பட்டதாக ஒன்ராறியோ மாகாணக் காவல்துறை சார்ஜென்ட் கெர்ரி ஷ்மிட் கூறினார். போலீசார் "நெருக்கடியில் உள்ள ஒருவரைக் கையாள்கின்றனர்" என்று அவர் மேலும் கூறினார்.
ஹாமில்டன் காவல்துறையினர் நேற்று முன்தினம் டன்டர்ன் தெரு தெற்கில் மேற்கு நோக்கி கிங் ஸ்ட்ரீட் வெஸ்ட் தெருமூடப்பட்டதாக தெரிவித்தனர்.