Breaking News
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருக்கு அவுஸ்திரேலிய குடியுரிமை

இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் திலகரத்ன டில்ஷானுக்கு அவுஸ்திரேலிய குடியுரிமை கிடைத்துள்ளது.
அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜேசன் வுட் தனது உத்தியோகபூர்வ முகநூலில் பதிவிட்டுள்ள பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் டில்ஷான் நாட்டின் கிரிக்கெட்டுக்கு சிறப்பான பங்களிப்பை வழங்குவார் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதேவேளை மேலும், அவரது மூத்த மகள் ரெசாந்தி திலகரத்ன அந்நாட்டில் திறமையான கிரிக்கெட் வீராங்கனையும் ஆவார்.
இவ்வாறான பின்னணியில் திலகரத்ன டில்ஷானுக்கு அவுஸ்திரேலியா அரசாங்கம் குடியுரிமை வழங்கியுள்ளது.