Breaking News
வடகொரியாவின் கிம் விளாடிவோஸ்டாக், பாதுகாப்பு தொழிற்சாலைகளுக்குச் செல்வார்: விளாடிமிர் புடின்
முன்னதாக வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் கிம்முடன் பேச்சு வார்த்தை நடத்தி, வட கொரிய தலைவருக்கு மதிய உணவு விருந்தளித்த புடின், இருதரப்பு ராணுவ-தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறினார்
வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் ரஷ்யாவின் தூர கிழக்குப் பகுதிக்கான தனது சுற்றுப்பயணத்தை விளாடிவோஸ்டாக் மற்றும் கொம்சோமோல்ஸ்க்-ஆன்-அமுரில் உள்ள பாதுகாப்பு மற்றும் பிற தொழிற்சாலைகளுக்குப் பார்வையிடுவார் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புதன்கிழமை தெரிவித்ததாக ஆர்ஐஏ (RIA) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் கிம்முடன் பேச்சு வார்த்தை நடத்தி, வட கொரிய தலைவருக்கு மதிய உணவு விருந்தளித்த புடின், இருதரப்பு ராணுவ-தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், இருப்பினும் ரஷ்யா தனது சர்வதேச கடமைகளுக்கு இணங்கும் என்றும் கூறினார்.