அமைச்சர் கெஹெலியவுக்கு வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளத் தடை
நீதவானின் உத்தரவின் பேரில் ரம்புக்வெல்லவின் வெளிநாட்டுப் பயணங்களும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டன.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல புதன்கிழமை (ஜனவரி 31) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்யத் தவறியதை அடுத்து வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 02) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு மாளிகாகந்த நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், நீதவானின் உத்தரவின் பேரில் ரம்புக்வெல்லவின் வெளிநாட்டுப் பயணங்களும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டன.
முன்னாள் சுகாதார அமைச்சர் புதன்கிழமை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகவிருந்த போதிலும், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கு விசாரணை மற்றும் ஜனாதிபதி செயலகத்தில் கூட்டப்பட்ட அமைச்சர்கள் உப குழுக் கூட்டத்தின் நடவடிக்கைகளில் கலந்து கொண்டதால் அவர் அவ்வாறு செய்யத் தவறிவிட்டார்.
ரம்புக்வெல்ல தனது வாக்குமூலத்தை வழங்குவதற்கு வேறொரு திகதியை நிர்ணயிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் எழுத்து மூலம் கோரியுள்ளதாக அறிய முடிகின்றது.