Breaking News
கன்னட எழுத்தாளர் தேவனுரா மகாதேவாவுக்கு தமிழக அரசின் வைக்கம் விருது அறிவிப்பு
மகாதேவா ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர், பல ஆண்டுகளாகச் சாதி பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வருகிறார்.
2024-ம் ஆண்டுக்கான வைக்கம் சமூக நீதிக்கான விருது கன்னட எழுத்தாளர் தேவானுர மகாதேவதேவாவுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மகாதேவா ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர், பல ஆண்டுகளாகச் சாதி பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வருகிறார்.
கேரள மாநிலத்தில் வியாழக்கிழமை (டிசம்பர் 12) நடைபெறும் வைக்கம் பெரியார் மணிமண்டப திறப்பு விழாவின் போது மகாதேவாவுக்கு ரூ.5 லட்சம் ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படும்.
கன்னட எழுத்தாளரும், தலித் ஆர்வலருமான இவருக்கு இலக்கியம், சமூக நீதி மற்றும் விளிம்புநிலைச் சமூகங்களின் அதிகாரமளித்தல் ஆகியவற்றில் சிறந்த பங்களிப்புகளுக்காக மதிப்புமிக்க விருது வழங்கப்பட்டுள்ளது.