சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் மீண்டும் வேலை நிறுத்தம்
திட்டமிட்ட வேலைநிறுத்த நடவடிக்கை அரசாங்கத்தின் சதி என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகச் செவிலியர் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதாரத் துறையைச் சேர்ந்த மொத்தம் 72 தொழிற்சங்கங்கள் இன்று (பிப்ரவரி 1) காலை 6.30 மணி முதல் நாடளாவிய ரீதியில் ஒரு நாள் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளன.
வைத்தியர் சங்கங்களும் அகில இலங்கை தாதியர் சங்கமும் இன்றைய வேலை நிறுத்தப் போராட்டத்தில் இணைந்து கொள்வதில்லை என தீர்மானித்துள்ளதாக அறிகின்றது. திட்டமிட்ட வேலைநிறுத்த நடவடிக்கை அரசாங்கத்தின் சதி என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகச் செவிலியர் சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், அவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதாகவும், குறித்த கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒரு மாத கால அவகாசத்தை கோரியதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். தங்களின் ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதில் கிடைக்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.