ஈரான் துறைமுகத்தில் ரசாயன வெடிப்பு: 4 பேர் பலி, 500 பேர் காயம்
ஓமானில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மூன்றாவது சுற்று அணுசக்தி பேச்சுவார்த்தைகளின் தொடக்கத்துடன் இந்த வெடிப்பு பொருந்திப்போனது.

தெற்கு ஈரானின் பண்டார் அப்பாஸில் உள்ள ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர குண்டுவெடிப்பில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது 516 பேர் காயமடைந்தனர் என்று அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
ஓமானில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மூன்றாவது சுற்று அணுசக்தி பேச்சுவார்த்தைகளின் தொடக்கத்துடன் இந்த வெடிப்பு பொருந்திப்போனது. இருப்பினும் சரியான காரணத்தை அதிகாரிகள் இன்னும் தீர்மானிக்கவில்லை. இருப்பினும், நகரின் ராஜாய் துறைமுகத்தில் உள்ள கொள்கலன்களில் இருந்து இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐ.ஆர்.ஜி.சி) கடற்படை தளத்திற்கு அருகே இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக ஜெருசலேம் போஸ்ட் தெரிவித்துள்ளது. இருப்பினும், இஸ்ரேலியப் பாதுகாப்புப் படை இந்தக் வெடிப்பில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளது. குண்டுவெடிப்புக்குப் பிறகு கருப்புப் புகை வெளியேறுவதை சமூக ஊடக காணொலிகள் காட்டின. மற்ற காணொலிகளில் கட்டடங்கள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்ததைக் காட்டின. அதே நேரத்தில் பலர் காயமடைந்தவர்களுக்கு உதவுவதையும் இடிபாடுகளை ஆய்வு செய்வதையும் அவற்றில் காண முடிந்தது.