உலக உணவுத் திட்டத்தின் கீழ் 55,000 மெட்ரிக் தொன் உரம் சிறிலங்காவிடம் கையளிப்பு
ரஷ்யாவின் உரல்கெம் குழுமத்தால் உற்பத்தி செய்யப்படும் உரங்களின் தொகுப்பு, சிறிலங்காவின் விவசாயத் துறைக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
'பந்தி பொஹர' என அழைக்கப்படும் 55,000 மெட்ரிக் தொன் முரியேட் ஒப் பொடெஷ் உரம் உலக உணவுத் திட்டத்தின் கீழ் நேற்று (12) சிறிலங்கா அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த, சிறிலங்காவுக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.தகரியன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர். ரஷ்யாவின் உரல்கெம் குழுமத்தால் உற்பத்தி செய்யப்படும் உரங்களின் தொகுப்பு, சிறிலங்காவின் விவசாயத் துறைக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையில் நன்கொடையாக வழங்கப்பட்ட உரத் தொகுதிகளில் சுமார் 30,000 மெட்ரிக் தொன் ஏற்கனவே நெற்செய்கையை ஆரம்பித்துள்ள விவசாயிகளுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. எஞ்சிய உரத் தொகையை தெங்கு பயிர்ச் செய்கைக்கு ஒதுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.