பாஜகவுக்கு மக்களின் தேர்வு முக்கியம் அல்ல: 3 புதிய முதல்வர்களின் ஆர்எஸ்எஸ் பின்னணி மீது காங். விமர்சனம்
கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து ஆட்சியை தட்டிப்பறித்த பாஜக மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் புதிய முதல்வர்களாக புதிய முகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறித்து விமர்சித்துள்ள காங்கிரஸ் மாநில அதிகாரங்களுக்கு பாஜக முடிவு கட்டுகிறது என்று காட்டமாக கூறியுள்ளது.
கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து ஆட்சியை தட்டிப்பறித்த பாஜக மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. வெற்றி பெற்ற மாநிலங்களின் புதிய முகங்களை முதல்வர்களாக்குவது குறித்து மத்திய பாஜக தீவிரம் காட்டி வந்தது. அதன்படி ஒரு வாரகால நீண்ட சஸ்பென்ஸ்களுக்கு பின்பு, சத்தீஸ்கர் முதல்வராக விஷ்ணு தியோ சாயும், மத்தியப் பிரதேச முதல்வராக மோகன் யாதவும், ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மாவும் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், “முதல்வர்களாக இந்தப் புதிய முகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சில காரணங்கள் உள்ளன. அவர்கள் அனைவரும் வலுவான ஆர்எஸ்எஸ் - ஏபிவிபி பின்னணி கொண்டவர்கள்” என்று காங்கிரஸ் கட்சி புதன்கிழமை தெரிவித்துள்ளது.