இந்தியப் பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அதிபர் ஷெபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்துள்ளார்
நவாஸ் ஷெரீப் வெளியிட்டுள்ள பதிவில், "பாகிஸ்தான் பிரதமராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தமைக்கு நரேந்திர மோடிக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வியாழக்கிழமை (மார்ச் 7) இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார்.
72 வயதான ஷெரீப் திங்கள்கிழமை (மார்ச் 4) பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்றார். வாக்கு மோசடி குற்றச்சாட்டுகளால் முடிவில்லாத தேர்தலுக்கு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, இரண்டாவது முறையாக நாட்டின் ஆட்சியை ஏற்றுக்கொண்டார்.
இதுகுறித்து நவாஸ் ஷெரீப் வெளியிட்டுள்ள பதிவில், "பாகிஸ்தான் பிரதமராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தமைக்கு நரேந்திர மோடிக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானின் 24-வது பிரதமராக பதவியேற்ற ஷெபாஸ் ஷெரீப்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றுள்ள ஷெபாஸ் ஷெரீப் அவர்களுக்கு வாழ்த்துக்கள்" என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.