Breaking News
பி.வி.நரசிம்ம ராவுக்கு காங்கிரஸ் போதுமான மரியாதை கொடுக்கவில்லை: ராஜ்நாத் சிங்
பி.வி.நரசிம்ம ராவுக்கு நாடு முழுவதும் அவருக்கு மரியாதை உண்டு. ஆனால் அவருக்கு உரிய மரியாதையை காங்கிரஸ் கொடுக்கவில்லை.

முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவுக்கு உரிய மரியாதையை காங்கிரஸ் கொடுக்கவில்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், "பி.வி.நரசிம்மராவ் இந்த ஆந்திர மண்ணில் பிறந்தார். அவர் இந்தியாவின் பிரதமராக இருந்தார். நாடு முழுவதும் அவருக்கு மரியாதை உண்டு. ஆனால் அவருக்கு உரிய மரியாதையை காங்கிரஸ் கொடுக்கவில்லை. அவருக்கு மரியாதை கொடுக்கும் பணியை யாராவது செய்திருக்கிறார்கள் என்றால், அது எங்கள் அரசாங்கம். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்துள்ளோம்.