10 முக்கிய மருத்துவமனைகளில் தொழிற்சங்கங்கள் செவ்வாய்க்கிழமை 4 மணி நேர வேலை நிறுத்தம்
ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெறவிருந்த கலந்துரையாடல் தவிர்க்க முடியாத காரணங்களால் நாளை மாலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சுகாதார செயலாளரினால் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெரிவு செய்யப்பட்ட 10 வைத்தியசாலைகளில் செவ்வாய்க்கிழமை (02) 4 மணி நேர அடையாள வேலை நிறுத்தமொன்றை முன்னெடுக்க சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்புடன் இணைந்த தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
நாளை காலை 06.30 மணி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள 10 பிரதான வைத்தியசாலைகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெறவிருந்த கலந்துரையாடல் தவிர்க்க முடியாத காரணங்களால் நாளை மாலை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார செயலாளரினால் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, நாளை (செவ்வாய்க்கிழமை) காலை தொடங்கவிருந்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை 24 மணி நேரத்திற்கு ஒத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார். இதேவேளை, செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணி முதல் 10 வைத்தியசாலைகளில் 4 மணி நேர அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.