Breaking News
கர்நாடக ரிசார்ட்டில் மகள் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு கேரள தம்பதி தற்கொலை
சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட தற்கொலைக் குறிப்பின்படி, பாதிக்கப்பட்டவர்கள், கேரளாவின் கொல்லத்தைச் சேர்ந்தவர்கள்.

கர்நாடகாவின் குடகில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் கேரளாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அவர்களது அறைக்குள் இறந்து கிடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தம்பதியினாரான வினோத் (43) மற்றும் அவரது மனைவி ஜபி (35) ஆகியோர் சனிக்கிழமையன்று ரிசார்ட்டில் உள்ள அறையின் கூரையில் இருந்து தூக்கில் தொங்குவதற்கு முன்பு, தங்கள் 10 வயது மகளை கழுத்தை நெரித்து கொன்றனர் என்று குடகு எஸ்பி கே ராமராஜன் தெரிவித்தார்.
சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட தற்கொலைக் குறிப்பின்படி, பாதிக்கப்பட்டவர்கள், கேரளாவின் கொல்லத்தைச் சேர்ந்தவர்கள்.
நிதி நெருக்கடி காரணமாக இந்தத் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வந்தது.