Breaking News
எதிர்காலத்தில் விளையாட்டுச் சட்டம் திருத்தப்படும் - ஹரின் பெர்னாண்டோ
விளையாட்டுத்துறை அமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சுக்கு விளையாட்டு சங்கங்களே மிகப்பெரும் பிரச்சினையாக இருப்பதாக குறிப்பிட்டார்.
எதிர்வரும் காலங்களில் நடைமுறையில் உள்ள விளையாட்டுச் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வர உள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய விளையாட்டுத்துறை அமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சுக்கு விளையாட்டு சங்கங்களே மிகப்பெரும் பிரச்சினையாக இருப்பதாக குறிப்பிட்டார்.
"இந்த கிரிக்கெட் பிரச்சினையை தீர்க்க நான் நியமிக்கப்பட்டுள்ளேன்," என்று அவர் கூறினார்.