Breaking News
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்துவுக்கு வெளிநாட்டு பயணத்தடை
குற்றப்புலனாய்வு திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றம் வெளிநாட்டு பயணத் தடையை விதித்துள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹொகந்தர மற்றும் கிரியுல்ல ஆகிய இடங்களில் அமைந்துள்ள தேசபந்து தென்னகோனின் வீடுகளில் விசாரணை அதிகாரிகள் மேற்கொண்ட போதிலும், அந்த வீடுகளில் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று தகவல்கள் வெளியானதை அடுத்து இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.