இடது கை வலியா? அலட்சியம் வேண்டாம்...
அண்மைகாலமாக வயது வரம்பு இன்றி மாரடைப்பால் உயிரிழப்பு விகிதம் அதிகரித்து கொண்டே வருகிறது.
மாரடைப்பு என்றால் இதயத்திற்கு போகின்ற இரத்த குழாயில் இரத்தம் போதுமானதாக இல்லாமல், இரத்த நாளங்களில் அடைப்பு, கொழுப்பு தேங்கி இருத்தல், ஆகிய காரணத்தினால் இருதயம் செயல் இழப்பதால் மாரடைப்பு ஏற்படுகிறது.
மார்பு பகுதியில் வலி ஏற்படுவது, அதிகம் வியர்ப்பது, சுவாசிப்பதில் பிரச்சனை ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும்.
இன்னொரு முக்கிய அறிகுறியென்றால் இடது கையில் அதீத வலி ஏற்படுவது..!
இதய தசைக்கு இரத்த ஓட்டம் தடைபடுவதால் மாரடைப்பு வருவதற்கு முன் உங்கள் இடது கையில் வலியை ஏற்படுத்தும். இடது கையில் லேசான வலி, அதிக வலி இருந்தால் அது மாரடைப்பின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.
எனவே இது போன்ற தருணங்களில், மருத்துவ உதவியை நாட வேண்டியது அவசியம்.