மருந்து ஒப்பந்தம் கூட்டாட்சி நிதிகளைப் பாதிக்காது: பிரீலேண்ட் உறுதி
தாராளவாதிகளுடன் மருந்தகம் தொடர்பாக ஒரு உடன்பாட்டை எட்டியதாக புதிய ஜனநாயகக் கட்சி வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியது.

இலையுதிர்காலத்தில் உறுதியளித்த செலவு விதிகளுக்கு இணங்கக் கூட்டாட்சி அரசாங்கம் விரும்புவதால், கனடாவின் நிதி நிலையை மருந்தக ஒப்பந்தம் பாதிக்காது என்று நிதியமைச்சர் கிறிஸ்டியா பிரீலேண்ட் கூறுகிறார்.
தாராளவாதிகளுடன் மருந்தகம் தொடர்பாக ஒரு உடன்பாட்டை எட்டியதாக புதிய ஜனநாயகக் கட்சி வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியது. இது சுகாதார அட்டை வைத்திருக்கும் ஒவ்வொரு கனேடியருக்கும் இலவச நீரிழிவு மருந்து மற்றும் பிறப்பு கட்டுப்பாட்டை அணுக அனுமதிக்கும்.
இரு தரப்பினருக்கும் இடையிலான வழங்கல் மற்றும் நம்பிக்கை ஒப்பந்தத்தின் முக்கிய தூணான ஒரு தேசிய மருந்தகத் திட்டத்தின் முதல் பகுதியில் இந்தப் பாதுகாப்பு சேர்க்கப்பட உள்ளது. இந்த வாரம் பொதுச் சபையில் (ஹவுஸ் ஆபி காமன்ஸ்) சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.