Breaking News
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கை கத்தோலிக்க ஆயர் பேரவையிடம் கையளிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் கத்தோலிக்க ஆயர் பேரவையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் குருணாகல் மாவட்ட ஆயர் ஹெரல்ட் அன்டணி ஆண்டகையிடம் குறித்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அனுமதியுடன் , ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இவ்வாறு கத்தோலிக்க ஆயர் பேரவையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.