Breaking News
ஜனாதிபதி திசாநாயக்க சீனா பயணம்
சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இந்த விஜயம் 2025 ஜனவரி 14 முதல் ஜனவரி 17 வரை நடைபெறும்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நான்கு நாள் உத்தியோகபூர்வபயணம் ஒன்றை மேற்கொண்டு நேற்று (13) மாலை சீனா நோக்கி பயணமாகியுள்ளார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இந்த விஜயம் 2025 ஜனவரி 14 முதல் ஜனவரி 17 வரை நடைபெறும்.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி திசாநாயக்க இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் இரு நாடுகளுக்குமிடையிலான மேம்பட்ட ஒத்துழைப்புக்கான வழிவகைகளை ஆராயும் நோக்கில் ஜனாதிபதி ஷீ ஜின்பிங், பிரதமர் லீ கியாங் மற்றும் ஏனைய சிரேஷ்ட சீன அதிகாரிகளுடன் உயர்மட்ட கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.