Breaking News
கர்நாடகாவில் ரூ.5 கோடி ரொக்கம், 106 கிலோ நகைகள் பறிமுதல்
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் ரூ.5.60 கோடி ரொக்கம், 3 கிலோ தங்கம், 103 கிலோ வெள்ளி நகைகள், 68 வெள்ளிக் கட்டிகள் ஆகியவை அடங்கும்.
கர்நாடகாவில் ஞாயிற்றுக்கிழமை பல்லாரியில் உள்ள கம்பலி பஜாரில் உள்ள ஹேமா ஜுவல்லர்ஸ் உரிமையாளரின் வீட்டில் காவல்துறையினர் நடத்திய சோதனையின் போது ரூ .7.6 கோடி மதிப்புள்ள ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் ரூ.5.60 கோடி ரொக்கம், 3 கிலோ தங்கம், 103 கிலோ வெள்ளி நகைகள், 68 வெள்ளிக் கட்டிகள் ஆகியவை அடங்கும்.
ஹேமா ஜுவல்லர்ஸ் உரிமையாளர் நரேஷ் சோனியை அதிகாரிகள் கைது செய்து விசாரித்தார்கள்
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் ஹவாலா பரிவர்த்தனையின் வருமானமாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இந்த பரிவர்த்தனைகள் குறித்து மேலும் விசாரணை நடத்தக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.