Breaking News
வடமேற்கு கல்கரியில் மழையால் சாலைகள் சேதம்
ஒரு ட்வீட்டில் கல்கரி காவல்துறை சில பகுதிகளைத் தவிர்க்குமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

கல்கரியில் அமலில் இருந்த கடுமையான இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை முடிவுக்கு வந்துள்ளது.
இருப்பினும், ஒரு ட்வீட்டில் கல்கரி காவல்துறை சில பகுதிகளைத் தவிர்க்குமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
16 அவென்யூ வடமேற்கு மற்றும் 13 அவென்யூ வடமேற்கு இடையேயான 10 தெரு வடமேற்கு பகுதியைத் தவிர்க்குமாறு காவல்துறை கால்கேரியர்களிடம் கேட்டுக் கொண்டது. கனமழையினால் ஏற்பட்ட சாலை சேதங்களுக்கு அவசரக் குழுவினர் தீர்வு காண்பதில் ஈடுபட்டுள்ளனர்.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பிளாக்ஃபுட் டிரெயில் தென்கிழக்கு பகுதியும் ஓக்டன் சாலை தென்கிழக்கு பாலத்தில் மூடப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.