500 ரூபாய் லஞ்சம் வாங்கிய ஓய்வு பெற்ற காவலருக்கு 5 ஆண்டு சிறை
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், முன்னாள் கான்ஸ்டபிளுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

குஜராத்தில் கடந்த 2014-ம் ஆண்டு லஞ்சம் பெற்ற வழக்கில் ஓய்வு பெற்ற கான்ஸ்டபிளுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துக் குஜராத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பல வருட நடவடிக்கைகளுக்குப் பிறகு வந்த மோர்பி மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பில், கடவுச்சீட்டுச் சரிபார்ப்புக்கு உதவுவதற்கு ஈடாக அப்போதைய கான்ஸ்டபிள் அமர்த் மக்வானா ரூ .500 லஞ்சம் கேட்டதாக குற்றவாளி என்று கண்டறியப்பட்டது.
அப்போது நடந்த இரகசிய நடவடிக்கையில் மக்வானாவை கையும் களவுமாக பிடித்து வைத்திருந்தது ஊழல் தடுப்புப் பிரிவுக் காவல்துறைக்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், முன்னாள் கான்ஸ்டபிளுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. அபராதம் செலுத்தப்படாவிட்டால், மக்வானாவுக்கு கூடுதலாக ஒரு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.