காசாவில் ஹமாஸ் போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது
பெயர்ப்பட்டியலை அனுப்பியதாக ஹமாஸ் கூறியது. இஸ்ரேலிய அதிகாரிகள் அதை உறுதிப்படுத்தினர்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஒப்புக்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் கிட்டத்தட்ட மூன்று மணிநேர தாமதத்திற்குப் பிறகு நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கிடையே இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 19 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
பெயர்ப்பட்டியலை அனுப்பியதாக ஹமாஸ் கூறியது. இஸ்ரேலிய அதிகாரிகள் அதை உறுதிப்படுத்தினர். ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்படவிருந்த பணயக் கைதிகளின் பெயர்களை ரோமிகோனென், டோரன் ஸ்டெய்ன் பிரெச்சர் மற்றும் எமிலிடமாரி என்று ஹமாஸ் வெளியிட்டது.
இந்த பெயர்களை இஸ்ரேல் உடனடியாக உறுதிப்படுத்தவில்லை. எவ்வாறாயினும், காசாவில் பணயக்கைதிகளின் குடும்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுக்களில் ஒன்றான பணயக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்கள் மன்றம், அவர்கள் எதிர்பார்க்கப்படும் விடுதலை பற்றிய செய்தியை வரவேற்பதாகவும், மூன்று பெண்களின் குறுகிய சுயவிவரங்களை வெளியிட்டதாகவும் கூறியது. இன்று காலை போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டவுடன், பொதுமக்கள் கொண்டாடத் தொடங்கினர்.