Breaking News
கதிர்காமத்தில் நில நடுக்கம்

கதிர்காமம் – லுனுகம்வெஹேர பகுதியில் சிறு அளவிலான நில அதிர்வொன்று பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவிக்கின்றது.
இந்த நிலஅதிர்வு நேற்றிரவு 10.24 அளவில் பதிவாகியுள்ளது.
2.5 ரிக்டர் அளவில் இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாகவும் பணியகம் குறிப்பிடுகின்றது.
இந்த நில அதிர்வினால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை.
நாட்டின் தென் பகுதி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் இவ்வாறான நில அதிர்வுகள் பதிவிகியிருந்தமை குறிப்பிடத்தக்கது