Breaking News
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி காலமானார்
ஆகஸ்ட் 19 ஆம் தேதி நிமோனியா காய்ச்சலால் புதுடெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) அனுமதிக்கப்பட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானார்.
ஆகஸ்ட் 19 ஆம் தேதி நிமோனியா காய்ச்சலால் புதுடெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) அனுமதிக்கப்பட்டார்.
சீதாராம் யெச்சூரியின் உடலை அவரது குடும்பத்தினர் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கியதாக எய்ம்ஸ் மருத்துவமனை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவரது மறைவுக்குப் பிரதமர் மோடி, ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளனர்.