Breaking News
போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி சிறிலங்காவை விட்டு வெளியேற முயன்ற இரு இந்தியர்கள் கைது
பண்டாரநாயக்க பன்னாட்டு விமான நிலையத்தில் தங்கியிருந்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் இருவரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த இரண்டு இந்தியக் குடிமகன்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க பன்னாட்டு விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
பண்டாரநாயக்க பன்னாட்டு விமான நிலையத்தில் தங்கியிருந்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் இருவரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறையின் கூற்றுப்படி, 43 மற்றும் 39 வயதுடைய இருவரும் ஜூன் 26 அன்று சுற்றுலா விசாவில் சிறிலங்காவுக்கு வந்துள்ளனர். மேலும் போலி கடவுச்சீட்டை தயாரித்து நெதர்லாந்து செல்ல முயன்றனர்.
மேலதிக விசாரணைகளுக்காகப் பண்டாரநாயக்க பன்னாட்டு விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.