Breaking News
ஸ்காபரோவில் நள்ளிரவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி
அதிகாலை 1 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ரொறன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஸ்காபரோவில் உள்ள ஓக்ரிட்ஜ் பகுதியில் இளைஞர் ஒருவர் நள்ளிரவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
டான்ஃபோர்த் வீதிக்கு வடக்கே உள்ள கட்டராகி கிரசன்ட் மற்றும் வார்டன் அவென்யூ பகுதியில் உள்ள வீடொன்றில் அதிகாலை 1 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ரொறன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட ஒரு இளைஞரைத் துணை மருத்துவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த விசாரணையை மனிதப்படுகொலை பிரிவு தற்போது கையில் எடுத்துள்ளது. இதுவரை சந்தேகத்திற்குரிய எந்த தகவலும் இல்லை.