Breaking News
இலங்கையின் 49 ஆவது பிரதம நீதியரசராக நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன சத்தியப்பிரமாணம்
சிறிலங்காவின் 49 ஆவது பிரதம நீதியரசராக நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன ஞாயிறு காலை (27) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
சிறிலங்காவின் 49 ஆவது பிரதம நீதியரசராக நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதம நீதியரசர் முர்து நிருபா பிதுஷினி பெர்னாண்டோ ஓய்வு பெற்றதை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு அரசியலமைப்புப் பேரவையினால் நீதியரசர் சூரசேனவின் பெயர் அண்மையில் அங்கீகரிக்கப்பட்டது.