பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்களுக்கிடையில் வாய்தர்க்கம்
பாராளுமன்ற உறுப்பினர் அர்சுனா ஊழல்கள் நிறைந்த இடமாக பிரதேச சபைகளே காணப்படுகிறன. இவர்கள் எதற்கும் கதைகூறிவருகிறார்கள் என்ற சாரப்பட கருத்துக்களை முன்வைத்தார்.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அர்சுனா இராமநாதன் ,பிரதேச தவிசாளர்களுக்கிடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டதை அடுத்து அமர்வு கூச்சல் குழப்பங்களாக இருந்த
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று வியாழக்கிழமை யாழ்.மாவட்ட செயலககேட்போர் கூடத்தில் ஒருங்கிணைப்பு குழு தலைவரும் அமைச்சருமான சந்திரசேகரன் இணைத்தலைவர் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது
இதன்போது கிராமிய வீதிகள் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்ட சமயத்தில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் , ரஜீவன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் ஆகியோர் வீதிகள் மற்றும் கழிவகற்றல்கள் தொடர்ப்பில் கருத்துக்களை முன்வைத்தனர்.
அதன்போது பிரதேச சபைதவிசாளர்கள் நாங்கள் ஒழுங்காகவே பணிகளைச் செய்கின்றோம். எமக்கு ஆளனி பற்றாக்குறை இருக்கிறது இது பற்றி யாரும்கதைப்பதில்லை எனக் கூறியவேளை ஆளனி தொடர்பில் ஒருங்கிணைப்பு குழுகூட்டத்தில் கோரிக்கை முன்வைத்தால் அவைதொடர்பில் உரிய அமைச்சுடன் கதைக்க முடியும்ஆளும் தரப்பு உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.
அதனையடுத்து உள்ளூராட்சி மன்ற நிருவாகத்தில் கழிவுகள் ஒழுங்கான முறையில் வீதியால் கொண்டு செல்லப்படுவதில்லை. வீதியால் செல்லும் பொதுமக்கள் மீதே சிந்தப்படுகிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனால் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும் நாகள் தற்போது தான் பதவிக்கு வந்துள்ளோம். இது தொடர்பான தரவுகளை பெற்றுவருகிறோம். குறிப்பிட்ட காலத்திற்கு பின் சரிசெய்யப்படும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் குறிப்பிட்டார்.
இதேவேளை மிண்டும் மீண்டும் எந்த பிரதேச சபையாவது குப்பைகளை வண்டில்களில் கொண்டு செல்வதால் பாதுகாப்பான முறையில் கொண்டுசெல்லப்படுகுறாதா என கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் தர்க்கம் ஏற்பட்டது.
இந்த நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அர்சுனா ஊழல்கள் நிறைந்த இடமாக பிரதேச சபைகளே காணப்படுகிறன. இவர்கள் எதற்கும் கதைகூறிவருகிறார்கள் என்ற சாரப்பட கருத்துக்களை முன்வைத்தார்.
அச்சமயத்தில் பிரதேச சபை தவிசாளர்கள் ‘கதைக்கும் போது அவதானமாக கதைக்க வேண்டும் ஊழல் நடைபெற்றால் அதனை அடையாளப்படுத்த வேண்டும். எழுந்தமானமாக கூறக்கூடாது என்று சுட்டிக்காட்டியதை அடுத்து தர்க்கம் ஏற்பட்டது.
தொடர்ந்து அர்ச்சுனா எம்.பியும், பிரதேச சபை தவிசாளர்களும் முரண்பட்டுக் கொண்டிருந்தமையால் குழப்பநிலை ஏற்பட்டது





