கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ‘ஹரக் கட்டா’ அனுமதி
வயிற்று வலி காரணமாக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் தற்போது காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
‘ஹரக் கட்டா’ என்ற நதுன் சிந்தக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பயங்கரவாத விசாரணை பணியகத்தின் காவலில் உள்ள ஹரக் கட்டா, மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிடி ஸ்கேன் பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வயிற்று வலி காரணமாக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் தற்போது காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஹரக் கட்டா நேற்று முன்தினம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அந்த வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கிருந்து தப்பிச் செல்வதற்கு சதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ‘ஹரக் கட்டா’ உள்ளிட்ட மூவருக்கு எதிரான குற்றப்பத்திரிக்கையை முன்னெடுத்துச் செல்ல முடியாதென பிரதிவாதி தரப்பில் முன்வைக்கப்பட்ட அடிப்படை எதிர்ப்பு மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரிக்கப்பட்டுள்ளதோடு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள குற்றத்தினை மேல் நீதிமன்றின் முன்னிலையில் விசாரிக்க முடியுமென நீதவான் குறிப்பிட்டார். இதற்கமைய வழக்கு ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





