ரிஷாட் பதியுதீனிடம் நிதி மோசடி தொடர்பில் விசாரணை
நிதி மோசடி தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் 05-01-2026 அன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அழைப்பாணையின் பேரில் விசாரணைக்காக, ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.
கடந்த அரசாங்கத்தில் விவசாய அமைச்சை கொண்டு நடத்துவதற்காக இராஜகிரிய பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட விடயத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில், இந்த மோசடி தொடர்பாக வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.
கடந்த அரசாங்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





