Breaking News
வாகன விபத்து தொடர்பில் ரேஞ்ச் பண்டாரவின் மகன் கைது
யசோத சரக பண்டார பயணித்த கார் வீதியை விட்டு விலகி முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவின் புதல்வர் யசோத ரங்கே பண்டார நேற்று (29) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் கருவலகஸ்வெவ, மீ-ஓயா, 7 ஆம் மைல் போஸ்ட் அருகில் உள்ள ஆனையிறவுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
யசோத சரக பண்டார பயணித்த கார் வீதியை விட்டு விலகி முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வெவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.





