இலங்கை – சீனா இடை யே பாதுகாப்பு பேச்சுவார்த்தை
சீன மக்கள் குடியரசின் தேசிய குடிவரவு நிர்வாகத்தின் பிரதி அமைச்சர் ஜாங் யோங் தலைமையிலான தூதுக்குழுவினரை அமைச்சின் அதிகாரிகள் வரவேற்றிருந்தனர்.
இலங்கையின் எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும், அதனை நவீனமயமாக்குவதற்கும் சீனா தனது முழுமையான ஆதரவை வழங்கும் சீன மக்கள் குடியரசின் தேசிய குடிவரவு நிர்வாகத்தின் பிரதி அமைச்சர் ஜாங் யோங் உறுதி.
இலங்கையின் பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு மற்றும் சீன மக்கள் குடியரசின் தேசிய குடிவரவு நிர்வாகப் பிரதிநிதிகள் குழுவினருக்கும் இடையிலான உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தையொன்று 14-03-2026 அன்று பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான குடிவரவு குடியகல்வு நிர்வாகம், எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பொது பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
சீன மக்கள் குடியரசின் தேசிய குடிவரவு நிர்வாகத்தின் பிரதி அமைச்சர் ஜாங் யோங் தலைமையிலான தூதுக்குழுவினரை அமைச்சின் அதிகாரிகள் வரவேற்றிருந்தனர்..இலங்கையின் எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும், அதனை நவீனமயமாக்குவதற்கும் சீனா தனது முழுமையான ஆதரவை வழங்குவதாக இதன்போது உறுதியளித்தது. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை குடிவரவு குடியகல்வு மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் எவ்வாறு வினைத்திறனாகப் பயன்படுத்துவது என்பது தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
சர்வதேச ரீதியில் இடம்பெறும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், மனிதக் கடத்தல் மற்றும் இணையவழி குற்றங்கள் போன்ற இரு நாடுகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும் செயற்பாடுகளை ஒடுக்குவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. இத்தகைய சர்வதேச குற்றங்களை முறியடிப்பதற்கு இரு நாடுகளும் பரஸ்பர புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர். இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் வரலாற்று ரீதியான உறவுகளை நினைவுகூர்ந்த சீனத் தூதுக்குழுவினர், இலங்கைக்கு சீனா தொடர்ந்தும் தனது ஒத்துழைப்பை வழங்கும் எனவும் குறிப்பிட்டனர்.
இச்சந்திப்பில் சீன தரப்பிலிருந்து இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் மற்றும் தேசிய குடிவரவு நிர்வாக அதிகாரிகள் கலந்துகொண்டனர். இலங்கைத் தரப்பிலிருந்து பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல, அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் சமிந்த பத்திராஜ மற்றும் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.





